Tuesday, January 15, 2008

அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு இல்லை

இந்த வருடம் அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு இல்லை என்று தெரிந்தாலும் தெரிந்தது அலங்காநல்லூர் ஏரியாவுக்குள் தலை காட்ட முடியவில்லை. ஏதோ நந்திகிராமம் கலவர பூமிக்குள் வந்துவிட்டது போல் இருந்தது. அவ்வளவு மயான அமைதி. பிறகு பொங்கலன்று மறு அறிவிப்பு வந்து ஜல்லிக்கட்டு நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் தான் அந்த அழகான பூமி தன் சகஜ நிலைக்கு திரும்பியது.

Tuesday, January 1, 2008

எனக்கு தெரிந்து பல வருடங்களாக ஒவ்வொரு முறை வருடம் பிறக்கும் பொழுதும் கிராமப்புறங்களில் ஒலிக்கும் ஒரே பாடல் எதுவென்றால் அது கமல் நடிப்பில் வந்த hello every body i wish a happy new year... எனத் தொடங்கும் இளமை இதோ இதோ என்னும் பாடல்தான். இன்னும் அந்த பாடலை ஈடு செய்யும் விதமாக எந்த பாடலும் வரவில்லை போலும்.

அது கிடக்கட்டும் ..

( நிறுத்தம் )

குடித்துக்கொண்டே இந்த வருடம் குடிக்கவே கூடாதென்று உறுதிமொழி எடுக்கும் குடிமகன்களுக்கும்

ஆண்டு பிறந்த உடன் உறுதிமொழிகளை மட்டும் எடுத்துக்கொண்டு பின்னர் ஓரிரு நாட்களில் அனைத்தையும் மறந்துவிட்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த வருடம் போனதே தெரியல என்று மளுப்பும் ஆசாமிகளுக்கும்

இந்த வருடமாவது எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளை நிறைவேற்றிட வேண்டுமென்று சொல்லி சொல்லி ஒன்றையுமே நிறைவேற்றிடாமல் - 2007 வருடங்களை இழந்ததும் தெரியாமல் 2008ஐயும் வரவேற்க துணிந்து விட்ட என் இனிய தோழர்களுக்கும்,

மற்றும் இது போன்ற எனதன்பு நண்பர்களனைவருக்கும்

என் மனம் கணிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்