Tuesday, January 15, 2008

அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு இல்லை

இந்த வருடம் அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு இல்லை என்று தெரிந்தாலும் தெரிந்தது அலங்காநல்லூர் ஏரியாவுக்குள் தலை காட்ட முடியவில்லை. ஏதோ நந்திகிராமம் கலவர பூமிக்குள் வந்துவிட்டது போல் இருந்தது. அவ்வளவு மயான அமைதி. பிறகு பொங்கலன்று மறு அறிவிப்பு வந்து ஜல்லிக்கட்டு நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் தான் அந்த அழகான பூமி தன் சகஜ நிலைக்கு திரும்பியது.