Saturday, July 21, 2007

முதியோர் இல்லம்

அனுப்புனர்:

அம்மா என்றொரு அநாதை,.

பெறுநர் :

நன்றி மறந்த மகன்,
நான் வாழ்ந்த இல்லம்

பொருள் : பொருள் மட்டுமே பொருள்


ஞாபகமிருக்கிறதா மகனே?
இன்றுஅன்னையர் தினமாம்!
உனக்குஅன்னையை விட்ட
தினம்தான் ...ஞாபகத்திலிருக்கும்!

நீ என்விரல்பிடித்து நடந்த
நாட்களைகொஞ்சூண்டாவது உணர்கிறாயா?

என்னை விட்டுச்சென்றஇந்த நாளில்...
நான் உணர்கின்றேனடா...

என்னைப் பிடித்து நடைபயின்ற
அதே விரல்கள்தான் ...

என்னைஇங்கேயும் அழைத்து வந்ததை
நான் உணர்கின்றேனடா...

பள்ளி வாகனம் கண்விட்டு
மறையும் வரையிலும்,
உன்னை வழியனுப்பும் ...
விழிகளுக்குச் சொந்தக்காரி நான்!

இப்பொழுதோ உனது புதிய வாகனத்தில்
நான் கண்விட்டு மறையவேண்டுமென...
இங்கேவிட்டுச் சென்றது நியாயமா?

நீ கல்லூரி செல்லும் பொழுதும் வாசல் வரை வந்து ஊட்டிவிட்ட ...விரல்களுக்குச் சொந்தக்காரி நான்!

இங்கேவயிறாற கிடைத்தாலும்...வரிசைச் சாப்பாடுதான்!சௌக்கியமா மகனே..?

வருகிறவர்களெல்லாம் ...பரிதாபப்படுகிறார்கள்!பரிதாபப்படவேண்டிய நீயோவர மறுக்கிறாய்!

உயிலோடு இருக்கும்போது வந்தாய்
உயிரோடு இருக்கும்போது வருவாயா?

உனக்காய் எழுதி வைத்த சொத்துக்களை ...
திருப்பிக் கேட்கமாட்டேன்!
நான் செத்தால் ..என் சாம்பல் கேட்கவேனும் வா!

என் சாம்பல்ஈரப்பதமாய் இருந்தால் ...
பயந்து விடாதே!
அது நான் விட்டகண்ணீர்களின்
கலவைஅவ்வளவுதான்..!

ஒரு வேண்டுகோள் மகனே!
தயவுசெய்துஉன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!

என் மகனுக்காவது கடைசிவரை ...
தனிமையே கிடைக்க கூடாது !
மரணம் தவிர,


இப்படிக்கு,

அம்மா என்றொரு

அநாதை

Monday, July 2, 2007

Iru Murai Vendam..Ore Murai Vaa

எங்கோ நிகழுகின்றபோதுசெய்தியாய்!ஊரில்நடக்கின்றபோதுகாரியமாய்!உறவில்சம்பவிக்கும்போதுதுக்கமாய்!இல்லத்தில்ஏற்படுகின்றபோதுஇழப்பாய்!சம்பவம் ஒன்றாயிருந்தும்வலியில் ஏன்இத்தனை வித்தியாசம்?மரணமே!இயலுமேயானால் - இந்தவித்தியாசத்தைவிலக்கிக்கொடேன் !இரண்டுமுறைவந்து செல்கிறாய்முதல் முறைமௌனமாய் வந்துமனதைக் கொன்று செல்கிறாய்,இரண்டாம் முறைரகசியமாய் வந்துஊரறிய உயிரைக் கொன்று கொண்டு செல்கிறாய்!இரண்டு வருகைக்குமிடையில்இனிகால இடைவெளி வேண்டாம்!மனித உறவுகள்மனதில் நீர்த்தபின்உடல் உலகம் சுற்றுவதில்அர்த்தமுமில்லை.அன்புமில்லை!அதனால்சம்பவிக்கட்டும்இனி இரண்டு மரணமும்ஒருமித்தே!சர்வம் முழுதும்நடக்கட்டும் மானுடம் கைகோர்த்தே!

Kavalai Kavithai





பக்கத்து வீட்டுக்காரன்பசிக்கு உதவியிருக்கலாம்!


வயதானவரின் கைபிடித்துவீதி கடக்க வைத்திருக்கலாம்!


குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில்காசு போட்டுவிட்டுகடந்து சென்றிருக்கலாம்!


பேருந்தில் இருக்கையைகர்பிணிப்பெண்ணிற்காக ..காலி செய்து கொடுத்திருக்கலாம்!


எவருக்கேனும்இரத்தம் கொடுத்துஉயிர்காக்க..உதவியிருக்கலாம்!


எவரும் மிதித்துவிடக்கூடாதெனபாதையின் முட்களை..பக்குவமாய் ஒதுக்கியிருக்கலாம்!


பனியில் நடுங்கும்பூனையைக் கண்டுபச்சாதாபப்பட்டிருக்கலாம்!


காகத்தின் பசிக்காகசோற்றுப்பருக்கைகளைவீட்டு மாடியில்..வீசியிருக்கலாம்!


பூகம்பம் - சுனாமி - புயல் - வெள்ளம்நிவாரண நிதி கூடநீ அனுப்பியிருக்கலாம்!


இப்படிஎத்தனையோ இருக்கலாம்இருக்கலாம்தான்...


இருப்பினும்மதக்கலவரத்தில் நீமாற்று மதத்தவன்தானே!

யோசித்துப் பார்க்கிறேன்


சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப்பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?

***தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!
அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடி வருவது?

***அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர் சுற்றபோகும் நான் அணிந்து கொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டாஉன்னோடு ஓடிவருவது?


***நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை!அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?

***கோபத்தில் தம்பியை அடித்துவிட அது அப்பாவரும் நேரம் என்பதால் என்னை காட்டிக்கொடுக்காமல்அழுகையை அடக்கி கொள்வானே என் தம்பி அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?


***இப்படிஎனக்காக அழுவதற்குஎத்தனையோ இதயங்களிருக்கஎன்னை அழவைக்கும் நீ எனக்குவேண்டாமடி!

உண்மையில் இது எனது கவிதையல்ல என்று நான் கூறினால் அது தன்னடக்கம் என்று நீங்கள் எண்ணக் கூடும் ஆனால் அதுதான் உண்மை.