
பக்கத்து வீட்டுக்காரன்பசிக்கு உதவியிருக்கலாம்!
வயதானவரின் கைபிடித்துவீதி கடக்க வைத்திருக்கலாம்!
குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில்காசு போட்டுவிட்டுகடந்து சென்றிருக்கலாம்!
பேருந்தில் இருக்கையைகர்பிணிப்பெண்ணிற்காக ..காலி செய்து கொடுத்திருக்கலாம்!
எவருக்கேனும்இரத்தம் கொடுத்துஉயிர்காக்க..உதவியிருக்கலாம்!
எவரும் மிதித்துவிடக்கூடாதெனபாதையின் முட்களை..பக்குவமாய் ஒதுக்கியிருக்கலாம்!
பனியில் நடுங்கும்பூனையைக் கண்டுபச்சாதாபப்பட்டிருக்கலாம்!
காகத்தின் பசிக்காகசோற்றுப்பருக்கைகளைவீட்டு மாடியில்..வீசியிருக்கலாம்!
பூகம்பம் - சுனாமி - புயல் - வெள்ளம்நிவாரண நிதி கூடநீ அனுப்பியிருக்கலாம்!
இப்படிஎத்தனையோ இருக்கலாம்இருக்கலாம்தான்...
இருப்பினும்மதக்கலவரத்தில் நீமாற்று மதத்தவன்தானே!